Thursday, February 11, 2016

"நீங்க என்னோட குடைக்குள்ள வந்தாலென்


ஒரு ஆண் கொட்டும் மழையில் நனைந்தபடி நடந்து வந்து கொண்டிருந்தான். 🚶🏼
💦💦
🚶🏼🚶🏼
அதைப் பாத்த அழகான 

ஒரு பெண் 
💃
🏼: "நீங்க என்னோட குடைக்குள்ள வந்தாலென்ன ?
😃😃😃

ஆண் : " வேண்டாம். நன்றி சகோதரி... "
😳😳😳

அப்டினு சொல்லிட்டு அவன் நடந்து போய்ட்டான்...
😱😱😱😨

கருத்து
..
.
.
..
.
..
.
..
..
..
..
..
..
..
..
..
..
..
கருத்தும் குருத்தும் ஒண்ணுமில்ல.
அவனுக்குப் பின்னால அவனோட மனைவி வந்துக்கிட்டிருந்தா... 
😜😜😜😜😜


ஞாபக மறதி


ஒருவர்:- 'ஞாபக மறதி' என்பது எல்லோருக்குமே இருக்கும்... ஆனா, அவரைப் போல ஒரு ஞாபக மறதிக்காரரை நான் பார்த்ததே இல்லை!
மற்றவர்:- ஏன்? கடன் வாங்கினா, அந்த நிமிஷமே மறந்திடறாரா..?
ஒருவர்:- அட அது கூட பரவாயில்லையே! அடி - உதைகளை பொறுக்க முடியலேன்னு மூணு மாசம் முன்னாடி 'டைவர்ஸ்' பண்ணின பொண்ணையே, இப்ப மறுபடியும் கல்யாணம் பண்ணிக்கிட்டு வந்திருக்காருன்னா பார்த்துக்குங்களேன்...!
மற்றவர்:-?😣?😣?

Saturday, November 8, 2014

நெஞ்சை உருக்கும் கதை...! / Tamil touching story !


நெஞ்சை உருக்கும் கதை...!

ஒரு அணும் பெண்ணும் ஒரே ஊரில்
வாழ்ந்தார்கள். அந்த ஆண் அந்த பெண்ணின்
மீது காதல் கொண்டு தன்
விருப்பத்தை தெரிவிக்க அவனும்
உடனேயே ஏற்றுக்கொண்டான்...!

இருவரும் கதைக்கும்
போது அடிக்கடி அந்த ஆண்
சொல்லுவான் என் இதயம் என்னிடம்
இல்லை.அது எப்பொழுதும்
உன்னுடனேயே இருக்கும் என
கூறுவான்.

சிலவருடங்கள்
கழியவே வெளிநாட்டு மோகம் கொண்ட
அந்த காதலன் ''உன்னை என்னால்
திருமணம்
செய்ய முடியாது. எனக்கும் லண்டனில
படிச்சு அங்கயே பெரிய
உத்தியோகத்துல இருக்குற என்னோட
அத்தை பொண்ணுக்கும்
நிச்சயமாயிடுச்சு. ரெண்டு மாசம்
கழிச்சு ஊர்ல இருக்குற அம்மன் கோவில்ல
கல்யாணம் நடக்க போகுது.
என்னை மறந்துடு''
நு சொல்லிற்று போயிட்டான்...!

ரெண்டு மாசம் கழிச்சு அவன் சொன்ன
மாதிரியே அவனுக்கும் அவன்ட
அத்தை பொண்ணுக்கும் கல்யாணம்
நடந்திச்சு. கல்யாணம்
நடந்து ரெண்டு நாளால தனக்கு வந்த
பரிசுப்பொருட்கள்ல ஒன்ன
பிரிச்சு பார்த்த உடனே ஓ
என்று கத்தி அழுதான்.
அந்த பரிசு,
இரத்தம் நிரப்பப்பட்ட
ஒரு கண்ணாடி ஜாடியில் இதயம்
துடித்துக் கொண்டிருந்தது. ஜாடியின்
மூடியில் ''ஏய் முட்டாள்!!! உன் இதயம்
என்னிடமல்லவா இருக்குறது...
உன் மனைவிக்கு எதை கொடுப்பாய்...??
?'' என்று எழுதப்பட்ட தாள் ஒன்Ru
இணைக்கப்பட்டிருந்தது.
அப்பொழுது தான் அவன் உண்மையான
காதல் எது என்பதையும் தான் மன்னிக்க
முடியாத துரோகம்
செய்து விட்டதாகவும் வருந்தினான்...!

Tuesday, August 13, 2013

தட்டானுக்கு சட்டை போட்டால் குட்டை பையன் கட்டையால் அடிப்பான்.. அவன் யார்?


1. தட்டான்
தட்டாதவன்
2. குட்டைப் பையன்
வாமனன்
 மஹாபலிச் சக்கரவர்த்தி  99 அசுவமேத யாகம் செய்து முடித்துவிட்டு நூறாவது அசுவமேத யாகம் செய்கிறார். அவரிடம் சென்று யார் தானம் கேட்டாலும் தட்டாமல் தருவதால் அவரே தட்டான் ஆவார் .
அதென்ன சட்டை போடுவது?
சட்டை எதற்காகப் போடுகிறோம்? நெஞ்சை மறைக்கப் போடுகிறோம்..

அப்படியெனில் தட்டானுக்கு சட்டை போடுவது என்றால்?
தட்டாமல் தரும் மஹாபலி சக்கரவர்த்தி ஈகை நெஞ்சை மறைப்பது.. அதாவது தானம் தரமுடியாதபடிக்க­ுத் தடுப்பது.
நம்ம சுக்ராச்சாரியார் என்ன செய்யறார்? மஹாபலிச் சக்ரவர்த்தியை தடுக்கிறார். எச்சரிக்கிறார்.­அதையும் மீறி அவன் தானம் தர நீர் வார்க்க முயற்சிக்கையில்­ சிறுவண்டாய் மாறி நீர் வராதபடிக்கு அடிக்கிறார்.
அப்ப நம்ம குட்டை பையன் வாமனர் என்ன செய்யறார். ஒரு குச்சியை (கட்டை) எடுத்து தலையில் குத்திவிட சுக்ராச்சாரியரு­க்கு ஒரு கண் ஊனமாகிவிடுகிறது.
அது தான்
தட்டானுக்குச் சட்டை போட்டால்
குட்டைப் பையன்
கட்டையால் அடிப்பான்.


Saturday, August 3, 2013

குழந்தைகள் மனது வெள்ளைக் காகிதம்...


குழந்தைகள் மனது வெள்ளைக் காகிதம்...

அது கசங்கிவிடும் முன்பே நல்லதை எழுதிவிட வேண்டும்...

Related Posts Plugin for WordPress, Blogger...

வந்து சென்றவர்கள்