Thursday, August 1, 2013

படித்தவுடன் கிழித்துவிடவும் !!!


ஏழு மாதங்களில் 150 முறை எல்லைதாண்டியுள்ளது சீன ராணுவம் - செய்தி #
இந்த செய்தியை கேட்டு நம்ம பிரபலங்கள் பொங்கிட்டாங்க..

ரஜினி : கண்ணா.. பாகிஸ்தான் கூட்டமா வரும்.. சீனா சிங்கிளா தான் வரும்..

கமல் : WELL , ஆஹ்ம்.. சீனாகுமாரா சீனாகுமாரா நாளையும் எல்லை தாண்டுவாயா .. எல்லை தாண்டி கொள்ளை அடித்து மீண்டும் சீனா செல்வாயா..

அஜித் : நாம வாழனும்னா எத்தன சப்ப மூக்கு சீனாகரனையும் கொல்லலாம்..

விஜய் : வாழ்க்கை ஒரு வட்டம்டா.. இன்னிக்கு நீங்க தாண்டுனா நாளைக்கு நாங்க தாண்டுவோம்டா

சூர்யா : இந்தியாவை கூகுள் மேப்புல பார்த்துருப்ப..அட்லஸ் மேப்புல பார்த்துருப்ப..ஏன் நோக்கியா மேப்புல கூட பார்த்துருப்ப..எல்லைக்கு பக்கத்துல பார்த்துருக்கியா.. குள்ள பசங்களா.. நான் எகிறி அடிக்காமையே எட்டு டன் வெயிட்டுடா.. பார்க்குறியா.. பார்க்குறியா..

T . R . : டேய் சீனா நீ தாண்ட கூடாது எல்லை
சிம்பு தாண்டா என் புள்ள.. மறுபடியும் காலை வைக்காத எல்லையைத்தாண்டி.. மாலை போட்டு ஊதிடுவோம் உனக்கு சங்குதாண்டி

விஜயகாந்த் : யார்ரா அவன் சீனா.. நாய் நாய்.. அவன் எல்லை தாண்டுனா எனக்கு என்னடா.. மந்திரிங்க கட்சி விட்டு கட்சி தாண்டுறத எவனாச்சும் கேட்டிங்களாடா..ஆங்..

சரத்குமார் : புரட்சி தலைவி அவர்கள் பிரதமராக இருந்திருந்தால்இன்று அந்த சீனா படைக்கு சிம்ம சொப்பனமாக சீறிவரும் காளையாக இருந்திருப்பார்..

கலைஞர் : சீனாக்கார்களே சீனாக்கார்களே... நீங்கள் என்னை சைனா பஜாரில் கடை போட சொன்னாலும் நான் கலங்க மாட்டேன்.. பேட்டரி வித்து பொழைத்து கொள்வேன்

நாட்டாமை விஜயகுமார் : எலேய்.. யாருலேஅவன் சீனாகாரன் .. அவன படிதாண்டுன குத்ததுக்காக அவன இந்த 18 பட்டிலேருந்தும்ஒதுக்கி வைக்குறேன்ல .. எலேய் பசுபதி எடுரா வண்டிய.

பவர் ஸ்டார் : கொல கொலையா முந்திரிக்கா வெளிய போங்கடா கத்திரிக்கா.

மானாட மயிலாட கலா மாஸ்டர் : சீனாக்காரா இங்க வா.. இந்தா இந்த 100ரூபா வெச்சுக்கிட்டு திரும்பி போய்டு..

PM :
( அவரு என்னிக்கு பேசிருக்காரு )

ராமதாஸ் : அங்க பாருலே.. அவன் காது துடிக்குதுலே.. அவன் நம்ம சாதிக்காரன்லே

திருமா: ஐயா தலைவர் அவர்கள் சொல்வது போல சைனா பஜாரில் கடை வைக்க நாங்கள் முழு ஆதரவு தருவோம் என்று தெரிவித்து கொள்கிறோம்..

அண்மை செய்தி : பிரபலங்கள் பொங்கியதைகேட்ட சீனாகாரர்கள் எல்லையில் இருந்து தப்பித்தோம் பிழைத்தோம் என்று தலை தெறிக்க ஓடி தற்கொலை முயற்சி செய்வதாக நம்முடைய செய்தி வாசிப்பாளர் கூறுகிறார்..

சன் செய்திகளுக்காக எல்லையில் இருந்து பரிமளா குப்புசாமி வணக்கம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்..


No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...

வந்து சென்றவர்கள்