இது
நிழற்படமல்ல
நிஜம்!!
இந்த
தலைமுறையோடு
முடிந்து போகும்
நடவு நடும் கலை
நினைவிழந்து
நின்று போகும்!!
நடுவுப் பாடல்
இசை வட்டுகளில்..
இம்சையாய்
ஒலிக்கும்...
இது
நிழற்படமல்ல
நிஜம்!!
இன்று
இயந்திரமயமானதால்
நம் பிள்ளைகளுக்கு
நினைவூட்டு
நிழற்படங்களாய்
இருக்கப் போகிறது
வருங்காலத்தில்...!
-முத்துப்பேட்டை மாறன்
No comments:
Post a Comment