Thursday, August 1, 2013

தக்காளி யாருக்கிட்ட!!!


இந்தியன் பார் ஒன்றில் ஓர் அமெரிக்கர் நுழைந்தார்.

”நிறுத்தாமல் அடுத்தடுத்துப் பத்து பாட்டில் பீர் குடிப்பவர்களுக்கு பத்தாயிரம் ரூபாய் பரிசு. போட்டியில் தோற்றால் நீங்கள் எனக்கு பத்தாயிரம் ரூபாய் தரவேண்டும். சவாலுக்குத் தயாரா?” என்று அறிவித்தார்.

யாரும் அசையவில்லை. ஒருவர் மட்டும் எழுந்து அவசரமாக வெளியே போனார். இருபது நிமிடம் கழித்துத் திரும்பி வந்தார்.

”பந்தயத்துக்கு நான் தயார்” என்றார்.

அடுத்தடுத்து பத்து பாட்டில் பீர்களை அவர் காலி செய்து முடித்ததைப் பார்த்து, அமெரிக்கர் வியந்து போனார். சொன்னபடி பரிசுத் தொகையைக் கொடுத்துவிட்டு, ”ஆமாம், எதற்காக முதலில் எழுந்து வெளியே போனீர்கள்?” என்று கேட்டார்.

”பந்தயத்தில் என்னால் ஜெயிக்க முடிகிறதா என்று பக்கத்தில் உள்ள வேறொரு பாருக்குச் சென்று பத்து பாட்டில் பீர் குடித்துப் பார்த்தேன்” என்றார் அவர்.

தக்காளி யாருக்கிட்ட...

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...

வந்து சென்றவர்கள்