Tuesday, August 13, 2013

தட்டானுக்கு சட்டை போட்டால் குட்டை பையன் கட்டையால் அடிப்பான்.. அவன் யார்?


1. தட்டான்
தட்டாதவன்
2. குட்டைப் பையன்
வாமனன்
 மஹாபலிச் சக்கரவர்த்தி  99 அசுவமேத யாகம் செய்து முடித்துவிட்டு நூறாவது அசுவமேத யாகம் செய்கிறார். அவரிடம் சென்று யார் தானம் கேட்டாலும் தட்டாமல் தருவதால் அவரே தட்டான் ஆவார் .
அதென்ன சட்டை போடுவது?
சட்டை எதற்காகப் போடுகிறோம்? நெஞ்சை மறைக்கப் போடுகிறோம்..

அப்படியெனில் தட்டானுக்கு சட்டை போடுவது என்றால்?
தட்டாமல் தரும் மஹாபலி சக்கரவர்த்தி ஈகை நெஞ்சை மறைப்பது.. அதாவது தானம் தரமுடியாதபடிக்க­ுத் தடுப்பது.
நம்ம சுக்ராச்சாரியார் என்ன செய்யறார்? மஹாபலிச் சக்ரவர்த்தியை தடுக்கிறார். எச்சரிக்கிறார்.­அதையும் மீறி அவன் தானம் தர நீர் வார்க்க முயற்சிக்கையில்­ சிறுவண்டாய் மாறி நீர் வராதபடிக்கு அடிக்கிறார்.
அப்ப நம்ம குட்டை பையன் வாமனர் என்ன செய்யறார். ஒரு குச்சியை (கட்டை) எடுத்து தலையில் குத்திவிட சுக்ராச்சாரியரு­க்கு ஒரு கண் ஊனமாகிவிடுகிறது.
அது தான்
தட்டானுக்குச் சட்டை போட்டால்
குட்டைப் பையன்
கட்டையால் அடிப்பான்.


Saturday, August 3, 2013

குழந்தைகள் மனது வெள்ளைக் காகிதம்...


குழந்தைகள் மனது வெள்ளைக் காகிதம்...

அது கசங்கிவிடும் முன்பே நல்லதை எழுதிவிட வேண்டும்...

இது நிழற்படமல்ல நிஜம்!!


இது
நிழற்படமல்ல
நிஜம்!!

இந்த
தலைமுறையோடு
முடிந்து போகும்
நடவு நடும் கலை
நினைவிழந்து
நின்று போகும்!!

நடுவுப் பாடல்
இசை வட்டுகளில்..
இம்சையாய்
ஒலிக்கும்...

இது
நிழற்படமல்ல
நிஜம்!!

இன்று
இயந்திரமயமானதால்
நம் பிள்ளைகளுக்கு
நினைவூட்டு
நிழற்படங்களாய்
இருக்கப் போகிறது
வருங்காலத்தில்...!

-முத்துப்பேட்டை மாறன்

வாழ்கைத் தத்துவம்


1. பேசும்முன் கேளுங்கள், எழுதும் முன் யோசியுங்கள், செலவழிக்கும் முன் சம்பாதியுங்கள்
2. சில சமயங்களில் இழப்புதான் பெரிய ஆதாயமாக இருக்கும்.
3. யாரிடம் கற்கிறோமோ அவரே ஆசிரியர். கற்றுக்கொடுப்பவரெல்லாம் ஆசிரியர் அல்லர்.
4. நான் மாறும்போது தானும் மாறியும், நான் தலையசைக்கும் போது தானும் தலையசைக்கும் நண்பன் எனக்குத் தேவையில்லை. அதற்கு என் நிழலே போதும்!
... 5. நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!
6. நான் குறித்த நேரத்திற்குக் கால்மணி நேரம் முன்பே சென்று விடுவது வழக்கம். அதுதான் என்னை மனிதனாக்கியது.
7. நம்மிடம் பெரிய தவறுகள் இல்லை எனக் குறிப்பிடுவதற்கே, சிறிய தவறுகளை ஒப்புக்கொள்கிறோம்!
8. வாழ்க்கை என்பது குறைவான தகவல்களை வைத்துக்கொண்டு சரியான முடிவுக்கு வரும் ஒரு கலை.
9. சமையல் சரியாக அமையாவிடில் ஒருநாள் இழப்பு. அறுவடை சிறக்காவிடில் ஒரு ஆண்டு இழப்பு. திருமணம் பொருந்தாவிடில் வாழ்நாளே இழப்பு.
10. முழுமையான மனிதர்கள் இருவர். ஒருவர் இன்னும் பிறக்கவில்லை. மற்றவர் இறந்துவிட்டார்.
11. ஓடுவதில் பயனில்லை. நேரத்தில் புறப்படுங்கள்
12. எல்லோரையும் நேசிப்பது சிரமம். ஆனால் பழகிக்கொள்ளுங்கள்
13. நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்
14. காரணமே இல்லாமல் கோபம் தோன்றுவதில்லை. ஆனால் காரணம் நல்லதாய் இருப்பதில்லை
15. இவர்கள் ஏன் இப்படி? என்பதை விட, இவர்கள் இப்படித்தான் என எண்ணிக்கொள்
16. யார் சொல்வது சரி என்பதல்ல, எது சரி என்பதே முக்கியம்
17. ஆயிரம் முறை சிந்தியுங்கள். ஒருமுறை முடிவெடுங்கள்
18. பயம்தான் நம்மைப் பயமுறுத்துகிறது. பயத்தை உதறி எறிவோம்
19. நியாயத்தின் பொருட்டு வெளிப்படையாக ஒருவருடன் விவாதிப்பது சிறப்பாகும்
20. உண்மை புறப்பட ஆரம்பிக்கும் முன் பொய் பாதி உலகத்தை வலம் வந்துவிடும்
21. உண்மை தனியாகச் செல்லும். பொய்க்குத்தான் துணை வேண்டும்
22. வாழ்வதும் வாழவிடுவதும் நமது வாழ்க்கைத் தத்துவங்களாக ஆக்கிக்கொள்வோம்.
23. தன்னை ஒருவராலும் ஏமாற்ற முடியாது எனச் செருக்கோடு இருப்பவனே கண்டிப்பாக ஏமாந்து போகிறான்
24. உலகம் ஒரு நாடக மேடை ஒவ்வொருவரும் தம் பங்கை நடிக்கிறார்கள்
25. செய்வதற்கு எப்போதும் வேலை இருக்கவேண்டும் . அப்போது தான் முன்னேற முடியும்
26. அன்பையும் ஆற்றலையும் இடைவிடாது வெளிப்படுத்துகிறவர் ஆர்வத்துடன் பணிபுரிவர்
27. வெற்றி பெற்றபின் தன்னை அடக்கி வைத்துக்கொள்பவன், இரண்டாம் முறையும் வென்ற மனிதனாவான்
28. தோல்வி ஏற்படுவது அடுத்த செயலைக் கவனமாகச் செய் என்பதற்கான எச்சரிக்கை.
29. பிறர் நம்மைச் சமாதானப்படுத்த வேண்டும் என்று எதிர்பார்க்காமல், நாம் பிறரைச் சமாதானப்படுத்த முயற்சிக்க வேண்டும்.
30. கடினமான செயலின் சரியான பெயர்தான் சாதனை. சாதனையின் தவறான விளக்கம் தான் கடினம்
31. ஒன்றைப்பற்றி நிச்சயமாக நம்ப வேண்டுமென்றால் எதையும் சந்தேகத்துடனே துவக்க வேண்டும்
32. சரியானது எது என்று தெரிந்த பிறகும் அதைச் செய்யாமல் இருப்பதற்குப் பெயர்தான் கோழைத்தனம்.


மழை பெய்வதை யார் யார் எப்படி சொல்வார்கள்?


பள்ளிக்கூடம் படிக்கையில கேட்ட ஜோக் இது... இப்பவும் சுத்திக்கிட்டு இருக்கு...

மழை பெய்வதை யார் யார் எப்படி சொல்வார்கள் ..?

இரும்பு வியாபாரி – கனமா பெய்யுது
கரும்பு வியாபாரி – சக்கைப்போடு போடுது
சலவைக்காரர் – வெளுத்துக் கட்டுதுங்க
டாக்டர் – தினமும் மூணு வேளை
நர்ஸ் – நார்மலாத்தான்
பஞ்சு வியாபாரி – லேசா பெய்யுது
போலீஸ்காரர் – மாமூலா பெய்யுது
வேலைக்காரி – பிசு பிசுன்னு
அட்டை – விடாம பெய்யுது
ஆமை- வெளியே தலை காட்டா முடியலை
குயில் – அது ‘பாட்டு’க்கு பெய்யுது
தேள் – கொட்டு கொட்டுன்னு
நண்டு – பிடி பிடின்னு

via Ram Chinnappayal


Thursday, August 1, 2013

தக்காளி யாருக்கிட்ட!!!


இந்தியன் பார் ஒன்றில் ஓர் அமெரிக்கர் நுழைந்தார்.

”நிறுத்தாமல் அடுத்தடுத்துப் பத்து பாட்டில் பீர் குடிப்பவர்களுக்கு பத்தாயிரம் ரூபாய் பரிசு. போட்டியில் தோற்றால் நீங்கள் எனக்கு பத்தாயிரம் ரூபாய் தரவேண்டும். சவாலுக்குத் தயாரா?” என்று அறிவித்தார்.

யாரும் அசையவில்லை. ஒருவர் மட்டும் எழுந்து அவசரமாக வெளியே போனார். இருபது நிமிடம் கழித்துத் திரும்பி வந்தார்.

”பந்தயத்துக்கு நான் தயார்” என்றார்.

அடுத்தடுத்து பத்து பாட்டில் பீர்களை அவர் காலி செய்து முடித்ததைப் பார்த்து, அமெரிக்கர் வியந்து போனார். சொன்னபடி பரிசுத் தொகையைக் கொடுத்துவிட்டு, ”ஆமாம், எதற்காக முதலில் எழுந்து வெளியே போனீர்கள்?” என்று கேட்டார்.

”பந்தயத்தில் என்னால் ஜெயிக்க முடிகிறதா என்று பக்கத்தில் உள்ள வேறொரு பாருக்குச் சென்று பத்து பாட்டில் பீர் குடித்துப் பார்த்தேன்” என்றார் அவர்.

தக்காளி யாருக்கிட்ட...

இறைவனையும் மயக்குமே இந்த மெல்லிசை...!!!


தத்தித் தத்தி
நீ 
நடக்கையிலே 
உன் 
கால் சலங்கையின் 
ஜதியினிலே
பிறக்குதுப் பார்
புதிய இசை
ஏழு ஸ்வரங்களிலும்
இல்லாத
இனிய இசை
கல் மனதையும்
கரைக்குமே
இந்த இசை
இறைவனையும்
மயக்குமே
இந்த மெல்லிசை...!!!

>>>லதா<<<

via பெண்கள் Women

பெண்கள் அன்பிற்குக் கட்டுபட்டவர்களே தவிர, எவரும் பயந்தவர்கள் இல்லை


இதுவும் ஒரு தாயன்பு தான்....!


அன்னை தெரேசா




தண்டனை கொடுப்பதற்குத் தாமதம் செய்!, ஆனால், மன்னிப்பு கொடுப்பதற்கு யோசனை கூட செய்யாதே! 

-அன்னை தெரேசா

பருந்து மனிதனுக்கு தரும் பாடம் - வலிகள் இல்லாத வாழ்க்கை இல்லை.


பருந்து மனிதனுக்கு தரும் பாடம் - வலிகள் இல்லாத வாழ்க்கை இல்லை. வலிகள் பல நிறைந்ததுதான் வாழ்க்கை. 

ஒரு பருந்துக்கு ஆயட்காலம் எழுபது வருடங்கள். ஆனால் நற்பது வருடத்தில் அதன் அலகுகளும் கால் நகங்களும் இறக்கைகளும் பலமிழந்து விடுகின்றன. அதற்காக அந்தப் பருந்துக் கூட்டம் சோர்வடைந்து போவதில்லை. அவை தனது அலகுகள் பலமிழந்தவுடன் நேராக மலைக்குப் பறந்து செல்லுமாம். அங்கே மலையிலே தனது அலகை மோதி மோதி உடைத்து விடுமாம். சிறிது நாளில் புது அலகுகள் வளர்ந்துவிடும். பின்பு அந்த அலகால் தனது கால் நகங்களையும் இறக்கைகளையும் கொத்தி கொத்திப் பிடுங்கி விடுமாம். அவையும் சிறிது நாளில் புதிதாக வளர்ந்து விடும். அதன் பின்பு அந்த பருந்து முப்பது வருடங்கள் வாழுமாம்


இருப்பதில் திருப்தியடைவதே மகிழ்வு.



அதிக ஆடம்பர வசதிகள் மகிழ்ச்சியைத் தருவதில்லை. இருப்பதில் திருப்தியடைவதே மகிழ்வு.

கிளிஜோசியத்தில் நம்பிக்கை இல்லை..


கிளிஜோசியத்தில்
நம்பிக்கை இல்லை..
ஆனாலும் பார்க்கிறேன்
கிளியின் ஒருநிமிட
சுதந்திரத்திற்காக.. 

via Krishanthan Velu

ஓர் சொல்லில் உலகம் அம்மா


என் பொண்டாட்டி ஊருக்கு போயிடிச்சி !!!


தேடித்தான் பெற வேண்டிருக்கிறது அன்பான வார்த்தைகளை கூட


உழைக்க துணிந்தோருக்கு பிழைக்க வழியா இல்லை


இவரைச் சாதனையாளர் என்று சொல்லலாம். சைக்கிளில் ஒரு நடமாடும் ஓட்டல்.

# உழைக்க துணிந்தோருக்கு பிழைக்க வழியா இல்லை

பால் போன்ற சிரிப்பு...... சூப்பர்...!!!!


முயற்சி இல்லாமல் உயர்ச்சி இல்லை!


படித்தவுடன் கிழித்துவிடவும் !!!


ஏழு மாதங்களில் 150 முறை எல்லைதாண்டியுள்ளது சீன ராணுவம் - செய்தி #
இந்த செய்தியை கேட்டு நம்ம பிரபலங்கள் பொங்கிட்டாங்க..

ரஜினி : கண்ணா.. பாகிஸ்தான் கூட்டமா வரும்.. சீனா சிங்கிளா தான் வரும்..

கமல் : WELL , ஆஹ்ம்.. சீனாகுமாரா சீனாகுமாரா நாளையும் எல்லை தாண்டுவாயா .. எல்லை தாண்டி கொள்ளை அடித்து மீண்டும் சீனா செல்வாயா..

அஜித் : நாம வாழனும்னா எத்தன சப்ப மூக்கு சீனாகரனையும் கொல்லலாம்..

விஜய் : வாழ்க்கை ஒரு வட்டம்டா.. இன்னிக்கு நீங்க தாண்டுனா நாளைக்கு நாங்க தாண்டுவோம்டா

சூர்யா : இந்தியாவை கூகுள் மேப்புல பார்த்துருப்ப..அட்லஸ் மேப்புல பார்த்துருப்ப..ஏன் நோக்கியா மேப்புல கூட பார்த்துருப்ப..எல்லைக்கு பக்கத்துல பார்த்துருக்கியா.. குள்ள பசங்களா.. நான் எகிறி அடிக்காமையே எட்டு டன் வெயிட்டுடா.. பார்க்குறியா.. பார்க்குறியா..

T . R . : டேய் சீனா நீ தாண்ட கூடாது எல்லை
சிம்பு தாண்டா என் புள்ள.. மறுபடியும் காலை வைக்காத எல்லையைத்தாண்டி.. மாலை போட்டு ஊதிடுவோம் உனக்கு சங்குதாண்டி

விஜயகாந்த் : யார்ரா அவன் சீனா.. நாய் நாய்.. அவன் எல்லை தாண்டுனா எனக்கு என்னடா.. மந்திரிங்க கட்சி விட்டு கட்சி தாண்டுறத எவனாச்சும் கேட்டிங்களாடா..ஆங்..

சரத்குமார் : புரட்சி தலைவி அவர்கள் பிரதமராக இருந்திருந்தால்இன்று அந்த சீனா படைக்கு சிம்ம சொப்பனமாக சீறிவரும் காளையாக இருந்திருப்பார்..

கலைஞர் : சீனாக்கார்களே சீனாக்கார்களே... நீங்கள் என்னை சைனா பஜாரில் கடை போட சொன்னாலும் நான் கலங்க மாட்டேன்.. பேட்டரி வித்து பொழைத்து கொள்வேன்

நாட்டாமை விஜயகுமார் : எலேய்.. யாருலேஅவன் சீனாகாரன் .. அவன படிதாண்டுன குத்ததுக்காக அவன இந்த 18 பட்டிலேருந்தும்ஒதுக்கி வைக்குறேன்ல .. எலேய் பசுபதி எடுரா வண்டிய.

பவர் ஸ்டார் : கொல கொலையா முந்திரிக்கா வெளிய போங்கடா கத்திரிக்கா.

மானாட மயிலாட கலா மாஸ்டர் : சீனாக்காரா இங்க வா.. இந்தா இந்த 100ரூபா வெச்சுக்கிட்டு திரும்பி போய்டு..

PM :
( அவரு என்னிக்கு பேசிருக்காரு )

ராமதாஸ் : அங்க பாருலே.. அவன் காது துடிக்குதுலே.. அவன் நம்ம சாதிக்காரன்லே

திருமா: ஐயா தலைவர் அவர்கள் சொல்வது போல சைனா பஜாரில் கடை வைக்க நாங்கள் முழு ஆதரவு தருவோம் என்று தெரிவித்து கொள்கிறோம்..

அண்மை செய்தி : பிரபலங்கள் பொங்கியதைகேட்ட சீனாகாரர்கள் எல்லையில் இருந்து தப்பித்தோம் பிழைத்தோம் என்று தலை தெறிக்க ஓடி தற்கொலை முயற்சி செய்வதாக நம்முடைய செய்தி வாசிப்பாளர் கூறுகிறார்..

சன் செய்திகளுக்காக எல்லையில் இருந்து பரிமளா குப்புசாமி வணக்கம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்..


இன்றைய சமூகம்


உன்னுடன் யார் இருக்க முடியும் என்பதை உன் நடத்தை முடிவு செய்கிறது


நீ யாரை சந்திக்க வேண்டும் என்பதை காலம்
முடிவு செய்கிறது...
உன் வாழ்க்கையில் யார் இருக்க வேண்டும்
என்பதை உன் மனம் முடிவு செய்கிறது...
உன்னுடன் யார் இருக்க முடியும்
என்பதை உன் நடத்தை முடிவு செய்கிறது...

உழைப்பு உடலை வலிமைப்படுத்தும்... கஷ்டங்கள் மனதை வலிமைப்படுத்தும்....!


உழைப்பு உடலை வலிமைப்படுத்தும்... 
கஷ்டங்கள் மனதை வலிமைப்படுத்தும்....!

Tuesday, July 30, 2013

நமக்கு மின்சாரம் எங்கிருந்து கிடைக்கிறது..?


ஆசிரியர் கலை வேந்தர் பிள்ளைகளை கேள்விகள் கேட்டார்..

அக்னி.. நீ சொல்லு.. நமக்கு பால் எங்கேருந்து கிடைக்குது..?

மாடு புல்லைத் தின்று பால் கறக்கிறது.. பால்காரர் அதை நமக்குத் தருகிறார்..

வெரி குட்.. மனோஜ் .. நீ சொல்லு..மழை எப்படிக் கிடைக்கிறது..?

கடல் நீர் ஆவியாகிறது..மரங்கள் வெளிய்யிடும் ஆக்சிஜனால் மேகங்கள் குளிர்விக்கப்பட்டு, மழை பொழிகிறது..

சுட்டி.. நீ சொல்லு.. நமக்கு மின்சாரம் எங்கிருந்து கிடைக்கிறது..?

மூதேவிப் பசங்க கிட்டேருந்து..சார்..

மூதேவிப் பசங்களா..? என்ன சொல்றே..?

ஆமாம் சார்.. எப்போ கரண்ட் நின்னாலும் எங்கப்பா சொல்லுவார்.. "மூதேவிப் பசங்க.. கரண்டை நிறுத்திட்டானுக.. எப்போ விடுவானுகளோ..?"


இந்திய நாட்டின் மிக உயரிய விருதுகள்


 இந்தியாவின் மிக உயர்ந்த விருது 'பாரத ரத்னா' 

• 1 கோடி பரிசுத்தொகை கொண்ட விருது - காந்தி அமைதி விருது

• அமைதிக்கான மிக உயர்ந்த விருது - அசோக் சக்ரா விருது

• மிக உயர்ந்த இலக்கிய விருது - பாரதீய ஞானபீட விருது

• மிக உயர்ந்த சர்வதேச நட்புறவு விருது - நேரு சமாதான விருது

• மிக உயர்ந்த பத்திரிகையாளர் விருது - பி.டி.கோயங்கா விருது

• மிக உயர்ந்த பால்வள விருது - கோபால் ரத்னா விருது

• மிக உயர்ந்த கெüரவ ராணுவ விருது - ஃபீல்ட்
மார்ஷல் விருது

• மிக உயர்ந்த விளையாட்டு வீரர் விருது - அர்ஜுனா விருது

• மிக உயர்ந்த விளையாட்டுப் பயிற்சியாளர் விருது - துரோணாச்சார்யர் விருது

• மிக உயர்ந்த வீரதீர விருது - மஹாவீர் சக்ரா

• மிக உயர்ந்த மிகச் சிறந்த விளையாட்டு வீரர் விருது - ராஜீவ்காந்தி கேல்ரத்னா விருது

• மிக உயர்ந்த வேளாண்மை விருது -க்ருஷி பண்டிட் விருது

• மிக உயர்ந்த சினிமா விருது - தாதா சாகிப் பால்கே விருது

• மிக உயர்ந்த மிகச் சிறந்த திரைப்பட விருது - தங்கத் தாமரை விருது

• மிக உயர்ந்த மிகச் சிறந்த திரைப்பட நடிகர் விருது - பாரத்

• மிக உயர்ந்த மிகச் சிறந்த திரைப்பட நடிகை விருது - ஊர்வசி

• மிக உயர்ந்த மிகச் சிறந்த திரைப்பட இயக்குநர் விருது - இந்திரா காந்தி விருது

-V.RAJAMARUTHAVEL


இந்தக் குழந்தையைக் கவனிக்காமல் இருக்கும் பெற்றோர் என்ன ஜென்மமோ?


ஒரு ஆரம்பப்பள்ளி ஆசிரியை தன் மாணவர்களிடம் ஒரு கட்டுரை எழுதச் சொன்னார்.

தலைப்பு "கடவுள் தங்களுக்கு என்ன செய்ய வேண்டும் என விரும்புகிறீர்கள்" என்பது.

ஆசிரியை அக்கட்டுரைகளை திருத்தும் பொழுது ஒரு கட்டுரையை படித்துவிட்டு கண் கலங்குகிறார், அதைக் கண்ட அவர் கணவர்,

"என்ன ஆச்சு? ஏன் அழுகிறாய்? என்றார்.

என் மாணவன் எழுதிய இந்தக் கட்டுரையை படித்துப் பாருங்கள் என்று கொடுத்தார். அதில்,

"கடவுளே, என்னை என் வீட்டில் இருக்கும் தொலைக்காட்சி பெட்டியைப் போல் ஆக்கிவிடு. நான் அதன் இடத்தைப் பிடிக்க வேண்டும். அதைப் போல‌ வாழ வேண்டும். எனக்கான இடம், என்னைச் சுற்றி எப்பொழுதும் என் குடும்பத்தினர் பேசும் பொழுது அவர்கள் என்னுடைய பேச்சைக் கவனமாகக் கேட்க வேண்டும்.

அவர்களின் கவனம் என்னைச் சுற்றியே இருக்க வேண்டும். தொலைக்காட்சி ஓடாத பொழுதும் பெரும் சிறப்புக் கவனத்தை போல் நானும் பெற வேண்டும். அப்பா வேலை முடித்து வந்ததும் என்னுடன் விளையாட வேண்டும்.

அவர் களைப்பாக இருந்தால் கூட அப்புறம் அம்மா கவலையாக இருந்தாலும் என்னை விரும்பவேண்டும். என்னை வில‌க்கக் கூடாது. என் சகோதர சகோதரிகள் என்னுடன் விளையாட வேண்டும். சண்டையிடவேண்டும்.

என் குடும்பத்தினர் அனைவரும் என்னுடன் சில மணிகளாவது செலவிடவேண்டும். கடைசியாக ஒன்று நான் என் குடும்ப்பத்தினர் அனைவரையும் எப்பொழுதும் மகிழ்விக்க வேண்டும். என் இறைவா நான் உன்னிடம் அதிகம் கேட்கவில்லை, நான் தொலைக்காட்சி பெட்டியைப் போல் வாழ வேண்டும் அவ்வளவுதான்."

இதை படித்துவிட்டு கணவர் சொன்னார்,

"அந்தக் குழந்தை பாவம் என்ன? இந்தக் குழந்தையைக் கவனிக்காமல் இருக்கும் பெற்றோர் என்ன ஜென்மமோ?"

ஆசிரியை தன் கணவரிடம் கூறினார்,

"இந்தக் கட்டுரையை எழுதியது நம் மகன்"


முதுமையில் அவர்கள் உன்னுடன் இருப்பதை அசிங்கமாய் பார்க்கிறாயே..!!


முதுமையில் அவர்கள் உன்னுடன் இருப்பதை
அசிங்கமாய் பார்க்கிறாயே..!!
உன் எச்சில் ஊறிய சோறும்,
அவர்கள் மேல் சிதறிய சிறுநீர் வாசனையும்,
என்றாவது அவர்களுக்கு
அசிங்கமாய் தோன்றி இருக்குமா...???

நன்றி- Pon Mani.

விடா முயற்சி விஸ்வரூப வெற்றி...!


மனதளவில் எவ்வளவு பேர் ஊனமானவர்கள் என இந்த படத்தை பார்த்தால் தெரிகிறது...

விடா முயற்சி விஸ்வரூப வெற்றி...!

தரம் இல்லாமல் இருப்பது மாணவர்கள் மட்டும் அல்ல கல்லூரிகளும், கல்வி முறையுமே


மாணவர்கள் இன்றைய வியாபார உலகிர்கு ஏற்ற தரமான மாணவர்களாக இல்லை என்பதற்கான முழு காரணம் உங்கள் கல்வி முறையில் தரம் இல்லை என்பதே...

முதல் வகுப்பு தொடங்கி பள்ளி படிப்பு முடியும் வரை எப்படி மனப்பாடம் செய்து மதிப்பெண்கள் பெறுவது என்பதை மட்டுமே உங்கள் கல்வி முறையில் கற்றுகொள்கின்றனர் மாணவர்கள்....

இந்த கூட்டத்தில் ஒரு சிலரே தங்கள் திறமைகளைகளை வளர்கவும் வெளிஉலக அறிவை வளர்கவும் ஊக்குவிக்கப்டுகின்றனர் என்பதே இன்றைய நிலை.....

கல்லூரியிலும் மணப்பாடம் செய்து மதிப்பெண் பெற முடியும் என்ற நிலை இருப்பதாலே அதிக மதிப்பெண்னுடன் வரும் மாணவர்கள் தரமற்றும் இருக்க காரனம் இதற்கு இந்த கல்வி முறையே அல்லாமல் மாணவர்கள் காரணம் இல்லை.....

தரம் இல்லாமல் இருப்பது மாணவர்கள் மட்டும் அல்ல கல்லூரிகளும், கல்வி முறையுமே....

முயன்றுகொண்டே இருங்கள்......


நாம் எடுக்கும் அத்தனை முயற்சிகளும் வெற்றியடையாது….

அதற்காக நாம் முயலாமல் இருந்து விடக்கூடாது..

முயன்றுகொண்டே இருங்கள்......

@ Indupriya MP

Related Posts Plugin for WordPress, Blogger...

வந்து சென்றவர்கள்