Tuesday, July 30, 2013

இந்தக் குழந்தையைக் கவனிக்காமல் இருக்கும் பெற்றோர் என்ன ஜென்மமோ?


ஒரு ஆரம்பப்பள்ளி ஆசிரியை தன் மாணவர்களிடம் ஒரு கட்டுரை எழுதச் சொன்னார்.

தலைப்பு "கடவுள் தங்களுக்கு என்ன செய்ய வேண்டும் என விரும்புகிறீர்கள்" என்பது.

ஆசிரியை அக்கட்டுரைகளை திருத்தும் பொழுது ஒரு கட்டுரையை படித்துவிட்டு கண் கலங்குகிறார், அதைக் கண்ட அவர் கணவர்,

"என்ன ஆச்சு? ஏன் அழுகிறாய்? என்றார்.

என் மாணவன் எழுதிய இந்தக் கட்டுரையை படித்துப் பாருங்கள் என்று கொடுத்தார். அதில்,

"கடவுளே, என்னை என் வீட்டில் இருக்கும் தொலைக்காட்சி பெட்டியைப் போல் ஆக்கிவிடு. நான் அதன் இடத்தைப் பிடிக்க வேண்டும். அதைப் போல‌ வாழ வேண்டும். எனக்கான இடம், என்னைச் சுற்றி எப்பொழுதும் என் குடும்பத்தினர் பேசும் பொழுது அவர்கள் என்னுடைய பேச்சைக் கவனமாகக் கேட்க வேண்டும்.

அவர்களின் கவனம் என்னைச் சுற்றியே இருக்க வேண்டும். தொலைக்காட்சி ஓடாத பொழுதும் பெரும் சிறப்புக் கவனத்தை போல் நானும் பெற வேண்டும். அப்பா வேலை முடித்து வந்ததும் என்னுடன் விளையாட வேண்டும்.

அவர் களைப்பாக இருந்தால் கூட அப்புறம் அம்மா கவலையாக இருந்தாலும் என்னை விரும்பவேண்டும். என்னை வில‌க்கக் கூடாது. என் சகோதர சகோதரிகள் என்னுடன் விளையாட வேண்டும். சண்டையிடவேண்டும்.

என் குடும்பத்தினர் அனைவரும் என்னுடன் சில மணிகளாவது செலவிடவேண்டும். கடைசியாக ஒன்று நான் என் குடும்ப்பத்தினர் அனைவரையும் எப்பொழுதும் மகிழ்விக்க வேண்டும். என் இறைவா நான் உன்னிடம் அதிகம் கேட்கவில்லை, நான் தொலைக்காட்சி பெட்டியைப் போல் வாழ வேண்டும் அவ்வளவுதான்."

இதை படித்துவிட்டு கணவர் சொன்னார்,

"அந்தக் குழந்தை பாவம் என்ன? இந்தக் குழந்தையைக் கவனிக்காமல் இருக்கும் பெற்றோர் என்ன ஜென்மமோ?"

ஆசிரியை தன் கணவரிடம் கூறினார்,

"இந்தக் கட்டுரையை எழுதியது நம் மகன்"


No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...

வந்து சென்றவர்கள்