Tuesday, July 30, 2013

நமக்கு மின்சாரம் எங்கிருந்து கிடைக்கிறது..?


ஆசிரியர் கலை வேந்தர் பிள்ளைகளை கேள்விகள் கேட்டார்..

அக்னி.. நீ சொல்லு.. நமக்கு பால் எங்கேருந்து கிடைக்குது..?

மாடு புல்லைத் தின்று பால் கறக்கிறது.. பால்காரர் அதை நமக்குத் தருகிறார்..

வெரி குட்.. மனோஜ் .. நீ சொல்லு..மழை எப்படிக் கிடைக்கிறது..?

கடல் நீர் ஆவியாகிறது..மரங்கள் வெளிய்யிடும் ஆக்சிஜனால் மேகங்கள் குளிர்விக்கப்பட்டு, மழை பொழிகிறது..

சுட்டி.. நீ சொல்லு.. நமக்கு மின்சாரம் எங்கிருந்து கிடைக்கிறது..?

மூதேவிப் பசங்க கிட்டேருந்து..சார்..

மூதேவிப் பசங்களா..? என்ன சொல்றே..?

ஆமாம் சார்.. எப்போ கரண்ட் நின்னாலும் எங்கப்பா சொல்லுவார்.. "மூதேவிப் பசங்க.. கரண்டை நிறுத்திட்டானுக.. எப்போ விடுவானுகளோ..?"


இந்திய நாட்டின் மிக உயரிய விருதுகள்


 இந்தியாவின் மிக உயர்ந்த விருது 'பாரத ரத்னா' 

• 1 கோடி பரிசுத்தொகை கொண்ட விருது - காந்தி அமைதி விருது

• அமைதிக்கான மிக உயர்ந்த விருது - அசோக் சக்ரா விருது

• மிக உயர்ந்த இலக்கிய விருது - பாரதீய ஞானபீட விருது

• மிக உயர்ந்த சர்வதேச நட்புறவு விருது - நேரு சமாதான விருது

• மிக உயர்ந்த பத்திரிகையாளர் விருது - பி.டி.கோயங்கா விருது

• மிக உயர்ந்த பால்வள விருது - கோபால் ரத்னா விருது

• மிக உயர்ந்த கெüரவ ராணுவ விருது - ஃபீல்ட்
மார்ஷல் விருது

• மிக உயர்ந்த விளையாட்டு வீரர் விருது - அர்ஜுனா விருது

• மிக உயர்ந்த விளையாட்டுப் பயிற்சியாளர் விருது - துரோணாச்சார்யர் விருது

• மிக உயர்ந்த வீரதீர விருது - மஹாவீர் சக்ரா

• மிக உயர்ந்த மிகச் சிறந்த விளையாட்டு வீரர் விருது - ராஜீவ்காந்தி கேல்ரத்னா விருது

• மிக உயர்ந்த வேளாண்மை விருது -க்ருஷி பண்டிட் விருது

• மிக உயர்ந்த சினிமா விருது - தாதா சாகிப் பால்கே விருது

• மிக உயர்ந்த மிகச் சிறந்த திரைப்பட விருது - தங்கத் தாமரை விருது

• மிக உயர்ந்த மிகச் சிறந்த திரைப்பட நடிகர் விருது - பாரத்

• மிக உயர்ந்த மிகச் சிறந்த திரைப்பட நடிகை விருது - ஊர்வசி

• மிக உயர்ந்த மிகச் சிறந்த திரைப்பட இயக்குநர் விருது - இந்திரா காந்தி விருது

-V.RAJAMARUTHAVEL


இந்தக் குழந்தையைக் கவனிக்காமல் இருக்கும் பெற்றோர் என்ன ஜென்மமோ?


ஒரு ஆரம்பப்பள்ளி ஆசிரியை தன் மாணவர்களிடம் ஒரு கட்டுரை எழுதச் சொன்னார்.

தலைப்பு "கடவுள் தங்களுக்கு என்ன செய்ய வேண்டும் என விரும்புகிறீர்கள்" என்பது.

ஆசிரியை அக்கட்டுரைகளை திருத்தும் பொழுது ஒரு கட்டுரையை படித்துவிட்டு கண் கலங்குகிறார், அதைக் கண்ட அவர் கணவர்,

"என்ன ஆச்சு? ஏன் அழுகிறாய்? என்றார்.

என் மாணவன் எழுதிய இந்தக் கட்டுரையை படித்துப் பாருங்கள் என்று கொடுத்தார். அதில்,

"கடவுளே, என்னை என் வீட்டில் இருக்கும் தொலைக்காட்சி பெட்டியைப் போல் ஆக்கிவிடு. நான் அதன் இடத்தைப் பிடிக்க வேண்டும். அதைப் போல‌ வாழ வேண்டும். எனக்கான இடம், என்னைச் சுற்றி எப்பொழுதும் என் குடும்பத்தினர் பேசும் பொழுது அவர்கள் என்னுடைய பேச்சைக் கவனமாகக் கேட்க வேண்டும்.

அவர்களின் கவனம் என்னைச் சுற்றியே இருக்க வேண்டும். தொலைக்காட்சி ஓடாத பொழுதும் பெரும் சிறப்புக் கவனத்தை போல் நானும் பெற வேண்டும். அப்பா வேலை முடித்து வந்ததும் என்னுடன் விளையாட வேண்டும்.

அவர் களைப்பாக இருந்தால் கூட அப்புறம் அம்மா கவலையாக இருந்தாலும் என்னை விரும்பவேண்டும். என்னை வில‌க்கக் கூடாது. என் சகோதர சகோதரிகள் என்னுடன் விளையாட வேண்டும். சண்டையிடவேண்டும்.

என் குடும்பத்தினர் அனைவரும் என்னுடன் சில மணிகளாவது செலவிடவேண்டும். கடைசியாக ஒன்று நான் என் குடும்ப்பத்தினர் அனைவரையும் எப்பொழுதும் மகிழ்விக்க வேண்டும். என் இறைவா நான் உன்னிடம் அதிகம் கேட்கவில்லை, நான் தொலைக்காட்சி பெட்டியைப் போல் வாழ வேண்டும் அவ்வளவுதான்."

இதை படித்துவிட்டு கணவர் சொன்னார்,

"அந்தக் குழந்தை பாவம் என்ன? இந்தக் குழந்தையைக் கவனிக்காமல் இருக்கும் பெற்றோர் என்ன ஜென்மமோ?"

ஆசிரியை தன் கணவரிடம் கூறினார்,

"இந்தக் கட்டுரையை எழுதியது நம் மகன்"


முதுமையில் அவர்கள் உன்னுடன் இருப்பதை அசிங்கமாய் பார்க்கிறாயே..!!


முதுமையில் அவர்கள் உன்னுடன் இருப்பதை
அசிங்கமாய் பார்க்கிறாயே..!!
உன் எச்சில் ஊறிய சோறும்,
அவர்கள் மேல் சிதறிய சிறுநீர் வாசனையும்,
என்றாவது அவர்களுக்கு
அசிங்கமாய் தோன்றி இருக்குமா...???

நன்றி- Pon Mani.

விடா முயற்சி விஸ்வரூப வெற்றி...!


மனதளவில் எவ்வளவு பேர் ஊனமானவர்கள் என இந்த படத்தை பார்த்தால் தெரிகிறது...

விடா முயற்சி விஸ்வரூப வெற்றி...!

தரம் இல்லாமல் இருப்பது மாணவர்கள் மட்டும் அல்ல கல்லூரிகளும், கல்வி முறையுமே


மாணவர்கள் இன்றைய வியாபார உலகிர்கு ஏற்ற தரமான மாணவர்களாக இல்லை என்பதற்கான முழு காரணம் உங்கள் கல்வி முறையில் தரம் இல்லை என்பதே...

முதல் வகுப்பு தொடங்கி பள்ளி படிப்பு முடியும் வரை எப்படி மனப்பாடம் செய்து மதிப்பெண்கள் பெறுவது என்பதை மட்டுமே உங்கள் கல்வி முறையில் கற்றுகொள்கின்றனர் மாணவர்கள்....

இந்த கூட்டத்தில் ஒரு சிலரே தங்கள் திறமைகளைகளை வளர்கவும் வெளிஉலக அறிவை வளர்கவும் ஊக்குவிக்கப்டுகின்றனர் என்பதே இன்றைய நிலை.....

கல்லூரியிலும் மணப்பாடம் செய்து மதிப்பெண் பெற முடியும் என்ற நிலை இருப்பதாலே அதிக மதிப்பெண்னுடன் வரும் மாணவர்கள் தரமற்றும் இருக்க காரனம் இதற்கு இந்த கல்வி முறையே அல்லாமல் மாணவர்கள் காரணம் இல்லை.....

தரம் இல்லாமல் இருப்பது மாணவர்கள் மட்டும் அல்ல கல்லூரிகளும், கல்வி முறையுமே....

முயன்றுகொண்டே இருங்கள்......


நாம் எடுக்கும் அத்தனை முயற்சிகளும் வெற்றியடையாது….

அதற்காக நாம் முயலாமல் இருந்து விடக்கூடாது..

முயன்றுகொண்டே இருங்கள்......

@ Indupriya MP

எளிதில் வெற்றி பெறுவாய்...!


ஒருவர் உன்னை தாழ்த்திப் பேசும் போது ஊமையாய் இரு...
புகழ்ந்து பேசும் போது செவிடனாய் இரு...

எளிதில் வெற்றி பெறுவாய்...!

வெல்பவர்கள் தளர்வதில்லை ! தளர்பவர்கள் வெல்வதில்லை !


ஓர் எறும்புக்கு முன்னால் எந்தத் தடைகளை நீங்கள் வைத்தாலும் அது அடியில் சென்றோ அல்லது மேலால் சென்றோ, அல்லது சுற்றிச் சென்றோ தடைகளை கடக்கும்.

கவனித்தப் பாருங்கள், தடைகளை உடைப்பதற்கு எறும்புகள் காலத்தை விரயம் செய்து அழியவில்லை.

தடைகளை அங்கேயே விட்டு அவை முன்னேறுகின்றன.

எல்லாக் கஷ்டங்களிலும் எறும்பு தன்னால் முடிந்த எல்லாவற்றையுமே செய்து பார்க்கிறது.

வெல்பவர்கள் தளர்வதில்லை !

தளர்பவர்கள் வெல்வதில்லை !

என்ற கொள்கைக்கு அது ஆதாரமாக இருக்கிறது.


நீங்க அனுப்புன காசுல பாதிய அந்த புஷ் திருடிட்டார்


அமெரிக்க சிறுவன் ஒருவனுக்கு பயங்கர பணகஷ்டம். அவனுக்கு ஒரு அம்பது டாலர் தேவைப்பட்டது. கடவுளிடம் வெகு நாளாக வேண்டி பார்த்தான். ஒண்ணும் வேலைக்குஆகவில்லை.

கடைசியாக பணம் தர வேண்டி கடவுளுக்கு ஒரு கடிதம் எழுதினான். உறையின் மேல் கடவுள், அமெரிக்கா என்று எழுதி தபாலில் சேர்த்து விட்டான். தபால் அதிகாரிகள் இந்த கடிதத்தை பார்த்து ஆச்சரியபட்டார்கள்.

ஒரு விளையாட்டாக அதை வெள்ளை மாளிகைக்கு அனுப்பி வைத்தார்கள். புஷுக்கு ஒரே ஆச்சர்யம். "சரி.. இந்த பையனுக்கு உதவுவோம்.

ஆனால் ஒரு சிறு பையனுக்கு அம்பது டாலர் எல்லாம் அதிகம். எனவே இருபது டாலர் மட்டும் அனுப்புவோம்" என்று அனுப்பி வைத்தார். பணம் கிடைத்தவுடன்பையனுக்கு குஷி தாளவில்லை. நன்றி தெரிவித்து கடவுளுக்கு ஒரு கடிதம் எழுதினான். "ரொம்ப நன்றி கடவுளே.. நான்கேட்ட மாதிரி பணம் அனுப்பி வச்சுட்டீங்கள்..

ஆனாலும்.. நீங்க அமெரிக்க ஜனாதிபதி புஷ் ஆபீஸ் மூலமா பணம் அனுப்புனத நான் கவர பார்த்து தெரிஞ்சுக்கிட்டேன்.. தயவு செஞ்சு இனிமேல் அப்படி அனுப்பாதீங்க.. நீங்க அனுப்புன காசுல பாதிய அந்த புஷ் திருடிட்டார்..p


இந்த ஆண்டு டாஸ்மாக் மதுக்கடை வருமானம் ரூ.21,68


இந்த ஆண்டு டாஸ்மாக் மதுக்கடை வருமானம் ரூ.21,680 கோடி என்று பெருமைப்படும் அரசுக்கு எதிராக மதுக்கடைகளை மூட வலியுறுத்தி நந்தினி என்ற மாணவியின் தலைமையில் கோவை சட்டக்கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளதாக செய்திகள் வந்துள்ளன! போராடும் மாணவர்களுக்கு வாழ்த்துக்கள்! இந்த போராட்டம், அரசுக்கே அவமானம்!

இந்த போராட்டத்தை மதுவுக்கு எதிரான பிரச்சரமாக்கினால் இன்னும் வீச்சு அதிகமாகும்! மாணவர்களின் படிப்பையும் பாதிக்காது!

# அப்பனுக்கு பாடம் சொல்லும் சுப்பையாக்களுக்கு வாழ்த்துக்கள்!


Sunday, July 28, 2013

இதை படிங்கடா முதல்ல...


சபரி மலையில் இருந்து வேலூர் திரும்பும் ஒரு அய்யப்ப பக்தர் அருகில் நின்று கொண்டிருந்த ஒரு முஸ்லிம் பெரியவருக்கு இருக்க இடமளித்து எழும்பி நின்றார்...

அந்த பெரியவர் நீங்க இருங்க தம்பி மலையில் இருந்த இறங்கி களைப்பாக வந்திருப்பீங்க என கூறி இருக்க மறுத்தார்...

நான் ரெயிலில் வரும்போதே நல்லா ரெஸ்ட் எடுத்துட்டேன் நீங்க நோன்பு பிடிசிருப்பீங்க காலைல இருந்தே எதுவும் சாப்பிடாம களைப்பா இருப்பீங்க... நீங்க உக்காருங்க என்று சொல்லி உக்கார வைத்தார்...


கருஞ்சீரகம் சிறந்த நோய் நிவாரணி


குளிர்ச்சியால் ஏற்படும் நோய்களுக்கு கருஞ்சீரகம் நல்ல நிவாரணியாகும். கருஞ்சீரகத்தை வறுத்துத் தூளாக்கி எண்ணெயில் ஊறவைத்துப் பிறகு மூக்கில் சொட்டுகள் விட்டால் கடுமையான ஜலதோஷம் நீங்கும்.கபம்,குளிர் காய்ச்சல், குறட்டை, மூக்கடைப்பு ஆகியவற்றுக்குக் கருஞ்சீரகம் நல்ல பலன் தரும். கருஞ்சீரகத்தைத் தூளாக்கி தேனில் கலந்து வெந்நீருடன் சாப்பிட்டால் மூத்திரக் கல்லைக் கரைத்து சிறுநீர் அடைப்பை அகற்றும். மாதவிடாய்ப் போக்கையும் சீராக்கும்.

கருஞ்சீரகப் பொடியை ஒரு துணியில் கட்டி உறிஞ்சி வந்தால் ஜலதோஷத்திற்கு நல்லது. தாய்ப் பாலில் ஏழு கருஞ்சீரக வித்துகளை ஊறவைத்துப் பொடியாக்கி உறிஞ்சி வந்தால் மஞ்சள் காமாலை நோய் குணமாகும். 5கிராம் கருஞ்சீரகத்தைத் தண்ணீருடன் கலந்து சாப்பிட்டால் சுவாசக் கோளாறு சீரடையும். கருஞ்சீரகத்தை அரைத்துப் பத்துப் போட்டால் தலைவலிக்கு நல்லது. கருஞ்சீரகத்தைக் (vineger)ல் வேகவைத்து வாய் கொப்புளித்தால் பல் வலிக்கு நல்ல பலன் கிடைக்கும்.

கரும்பித்தம் மற்றும் கபத்தால் ஏற்படும் அஜீரணக் கோளாறை அகற்றுவதும் கருஞ்சீரகத்தின் தனிச் சிறப்பாகும்.கருஞ்சீரகத்தை வறுத்துத் தூளாக்கி மெழுகு மற்றும் அல்லி எண்ணெயுடன் கலந்து தலையில் தேய்த்தால் தலைமுடி உதிர்வதைத் தவிர்க்கலாம். கருஞ்சீரக எண்ணெய் பக்கவாத நோய்க்குச் சிறந்த மருந்தாகும். நாய்க்கடி, பிரசவ இரத்தப் போக்குத் தடங்கல், கர்ப்பபை வலி, சிரங்கு, கண்வலி, போன்ற நோய்களுக்கும் கருஞ்சீரகம் நல்ல நிவாரணியாகும்.

கருஞ்சீரகத்தின் சிறந்த நோய் நிவாரணி என்று நிரூபிக்கப்பட்டுள்ளன.

-ஆரோக்கியமான வாழ்வு

தகவல்கள்@
தமிழ்ச்சித்தர்களின் அறிவியல் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் குழுமம்.


காய்கறி வாங்குவது எப்படி ?


விவசாயத்தில் ஊறி கடந்த நம் முன்னோருக்கு இது பசு மரத்து ஆணி போல் பதிந்திருக்கும் ...நமக்கு அப்படியா ? விவசாயம் - விவசாயி இவைகளை கேவலமாக பார்க்க தெரிந்தோருக்கு அரிசி-காய்கறி களை கேவலமாக பார்க்க தெரியாது தான் -- எப்படியும் வாங்கி தான் ஆக வேண்டும் .... இணையத்தில் இதை படித்த உடன் சற்று வியந்தேன் ... நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள் ....

1. வாழை தண்டு: மேல் பகுதி நார் அதிகம் இல்லாமலும் உள்ளிருக் கும் தண்டு பகுதி சிறுத்தும் இருப்பதாக பார்த்து வாங்க வேண்டும்.

2. வெள்ளை வெங்காயம்: நசுக்கினாலே சாறு வரும்படி இருக்க வேண்டும்

3. முருங்கைக்காய் : முருங்கைக் காயை கட்டை மற்றும் ஆட்காட்டி விரல்களை பயன்படுத்தி சிறிது முறுக்கினால், எளிதாக வளைந் தால் அது நல்ல முருங்கை காய்

4. சர்க்கரை வள்ளிகிழங்கு: உறுதியான கிழங்கு இனிக்கும், அடி பட்டு கருப்பாக இருந்தால் கசக்கும்

5. மக்கா சோளம்: இளசாகவும் இல்லாமல் ரொம்பவும் முற்றாமல் மணிகளை அழுத்தி பார்த்தால் உள்ளே இறங்காமல் இருந்தால் அதுநல்ல மக்காச்சோளம்.

6.தக்காளி: தக்காளி நல்ல சிவப்பில் தக்காளி இருந்தால் அதை வாங்கலாம் (குறிப்பு பெங்களூர் தக்காளி ஒரு வாரம் ஆனாலும் கெடாது இருக்கும்).

7. கோவைக்காய் : முழுக்க பச்சையாக வாங்க வேண்டும். சிவப்பு லேசாக இருந்தாலும் வாங்க வேண்டாம். பழுத்து ருசி இல்லாமல் இருக்கும்

8. சின்ன வெங்காயம்: பழைய வெங்காயம் வாங்குவதே நல்லது. இரண்டு பல் இருப்பதாக, முத்து முத்தாக தெளிவாக இருப்பதை வாங்கவும்

9. குடை மிளகாய் : தோல் சுருங்காமல் fresh ஆக இருப்பதை வாங் கவும். கரும்பச்சையில் வாங்கவேண்டாம். அடிபட்டிருக்கும். எல்லா நிற குடை மிளகாய்களும் ஒரே சுவையில் தான் இருக்கும்

10. காலிபிளவர்: பூக்களுக்கிடையே இடைவெளி இல்லாமல் அடர்த் தியாக காம்பு தடினமனாக இல்லாமல் வாங்கவும்

11. மாங்காய் ,தேங்காயை காதருகே வைத்து தட்டி பார்ப்பது போல மாங்காயும் தட்டி பார்க்கவும். சத்தம் வரும். அத்தகைய மாங்காயில் கொட்டை சிறிதாக இருக்கும்

12. பீர்க்கங்காய் ( நார்ச்சத்து உள்ள மிக நல்ல காய் இது ) : அடிப் பகுதி குண்டாக இல்லாமல் காய் முழுதும் ஒரே சைசில் இருக்கு மாறு பார்த்து வாங்குவது நல்லது

13. பரங்கிக்காய் கொட்டைகள் முற்றியதாக வாங்கவும்

14. புடலங்காய் : கெட்டியாக வாங்கவும். அப்போதுதான் விதைப்பகு தி குறைவாக, சதை பகுதி அதிகமாக இருக்கும்

15. உருளை கிழங்கு: முளை விடாமல் பச்சை நரம்பு ஓடாமல் கீறி னாலே தோல் உதிர்ந்து பெயர்ந்து வர வேண்டும்
16. கருணை கிழங்கு: முழுதாக வாங்கும் போது பெரியதாக பார்த்து வாங்குவது நல்லது. வெட்டிய கிழங்கை விற்றால், உள் புறம் இளம் சிவப்பு நிறத்தில் இருக்குமாறு பார்த்து வாங்கவும்

17. சேப்பங்கிழங்கு : முளை விட்டது போல் ஒரு முனை நீண்டிருக் கும் கிழங்கு சமையலுக்கு சுவை சேர்க்காது. உருண்டையாக பார் த்து வாங்கவும்

18. பெரிய வெங்காயம் மேல் (குடுமி) பகுதியில் தண்டு பெரிதாக இல்லாமல் பார்த்து வாங்கவும்

19. இஞ்சி: லேசாக கீறி பார்க்கும் போது தோல் பெயர்ந்து வருவது நல்லது. நார் பகுதி குறைவாக இருக்கும்

20. கத்திரிக்காய்: தோல் softஆக இருப்பதுபோல் பார்த்து வாங்கவும்

21. சுரைக்காய் : நகத்தால் அழுத்தினால் நகம் உள்ளே இறங்க வேண்டும். அப்போது தான் இளசு என்று அர்த்தம்

22. பூண்டு: பல் பல்லாக வெளியே தெரிவது நல்லது. வாங்கலாம்

23. பீன்ஸ் பிரன்ச் பீன்ஸில் நார் அதிகம். புஷ் பீன்ஸில் நார் இருக் காது. தோல் soft-ஆக இருந்தால் சுவை அதிகமாய் இருக்கும்
24. அவரை: தொட்டு பார்த்து விதைகள் பெரிதாக இருக்கும் காய்கள் தவிர்ப்பது நல்லது. இளசாக வாங்கினால் நார் அதிகம் இருக்காது

25. பாகற்காய்: பெரிய பாகற்காயில் உருண்டையை விட, தட்டையா ன நீண்ட காய் நல்லது

26. வாழைப்பூ : மேல் இதழை விரித்து பூக்கள் கருப்பாகாமல் வெளி ர் நிறத்தில் இருக்கிறதா என பார்க்கவும். அப்படி இருந்தால் பிரெஷ் காய் என்று அர்த்தம்

27. மொச்சை : கொட்டை பெரிதாக தெரியும் காய் பார்த்து வாங்கவும்

28. சௌசௌ : வாய் போன்ற பகுதி விரிசல் பெரிதாக இல்லாத படி பார்த்து வாங்கவும். விரிசல் இருந்தால் முற்றிய காய்

29. முள்ளங்கி: லேசாக கீறினால் தோல் மென்மையாக இருந்தால் அது இளசு- நல்ல காய்
30. வெள்ளரி மேல் நகத்தால் குத்தி பார்த்தால் நகம் உள்ளே இறங்கி னால், நல்ல காய். விதைகள் குறைவாக இருக்கும்

31. பச்சை மிளகாய் : நீளமானது சற்று காரம் குறைவாக இருக்கும். சற்றே குண்டானது தான் காரம் தூக்கலாக வாசனையும் பிரமாதமாக இருக்கும்.

via ரா. ராஜகோபாலன்

கணினியைப் பார்க்கும் கண்களுக்குப் பயிற்சி..!




எந்தவொரு உடல் உறுப்பும், ரத்தம் அதிகமாக செல்லாமல் இருந்தோலோ, அதிகப்படியான வேலையை செய்யும்போதோ அதில் பாதிப்பு ஏற்படுகிறது.

உடல் உறுப்பில் மிக முக்கியமானது கண். சாதாரணமாக நாம் பார்ப்பதால் கண்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படுவதில்லை. 
ஆனால், கண்களுக்கு மிக அருகில் அதிக ஒலியுடன் கூடிய கணினியைத் தொடர்ந்து பல மணிநேரங்கள் பார்த்துக் கொண்டிருப்பதால் கண் பாதிக்கப்படுகிறது.

கண்களுக்கு ஓய்வு என்றால் கண்களுக்கு இருளைக் கொடுக்க வேண்டும். கண்களுக்கு இருளைக் கொடுப்பது மட்டுமல்லாமல், மனதின் சிந்தனையை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும்.

கண்களுக்கு ஓய்வளிக்க பல ஆசனங்கள் உள்ளது. கண்களுக்கு அதிக ரத்த ஓட்டம் அளிக்க தலைகீழ் ஆசனம் உள்ளது. சிரசாசனம் செய்வதால் கண்களின் பார்வை அதிகரிக்கும்.

மேலும், கண்களுக்கு திராடகம் என்ற ஒரு பயிற்சி உள்ளது. அதாவது, ஒரு இருளான அறையில் மெழுகுவர்த்தி ஏற்றி வைத்து அதைப் பார்த்துக் கொண்டே இருந்தால் கண்களுக்கு அதிகமான சக்திக் கிடைக்கும்.

சூரியநமஸ்காரம் செய்வதாலும் கண் பார்வை அதிகரிக்கும். அதற்குத்தான் கண் கெட்ட பிறகு சூரியநமஸ்காரமா என்று கேட்பார்கள். எனவே சூரியநமஸ்காரம் செய்வதால் கண் பார்வை அதிகரிக்கும்.பொதுவாக சூரியநமஸ்காரத்தை அதிகாலையில் சூரியன் உதயத்திற்கு முன்பாக செய்ய வேண்டும். சூரிய நமஸ்காரத்தை வெவ்வேறு வேளைகளில் செய்வதால் வெவ்வேறு பலன்கள் கிட்டும்.

முக்கியமான விஷயம் என்னவென்றால், தினமும் 8 மணி நேரம் நிம்மதியாகத் தூங்க வேண்டும். அதுவும் மிகவும் இருளான ஒரு அறையில் தூங்குவதே கண்களுக்கு ஒரு நல்ல ஓய்வாக அமையும். பின் தூங்கி முன் எழுதல் மிகவும் நல்லது. அதாவது சீக்கிரமாகத் தூங்கி அதிகாலையில் எழுவது உடலுக்கும் புத்துணர்ச்சி கிட்டும்.

அலுவலகத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கும் போது இடையே உங்கள் கண்களுக்கு ஓய்வு தேவைப்படும்போது, உள்ளங்கைகள் இரண்டையும், நமது கண்களில் அழுத்தி சிறிது நேரம் வைத்திருந்து மூச்சை உள்ளிழுத்து வெளிவிட்டால் நல்ல பலன் கிடைக்கும். அப்படி செய்யும்போது உள்ளங்கைகளை எடுத்துவிட்டு சிறிது நேரம் கழித்து மெதுவாக கண்களைத் திறக்க வேண்டும்.

மேலும், இதனை வேறு முறையிலும் செய்யலாம். அதற்கு அதிக பலன் கிட்டும். அதாவது, ஒரு ஈரத் துணியை நனைத்து பின்பக்க கழுத்தில் போட்டுவிட்டு சிறிது எண்ணெயை புருவங்களில் தடவிவிட்டு இரண்டு உள்ளங்கைகளையும் கண்களில் அழுத்தும்போது உங்களது கண்களுக்கு குளிர்ச்சியும், ஓய்வும் ஒரு சேர கிடைக்கும்.

புருவம் என்பது, கண்களுக்குத் தேவையான வெப்பத்தை சீராக வைத்திருக்க அமைக்கப்பட்ட ஒரு இயற்கை கொடையாகும். புருவங்களின் சூட்டினால்தான் கண்களின் குவியங்கள் எளிதாக சுருங்கி விரிகின்றன. ஆனால், அதை விட அதிகமான வெப்பத்தை நம் கண்கள் கணினியில் இருந்து பெற்று வருகிறது. எனவே அந்த வெப்பத்தைக் குறைக்க புருவங்களில் எண்ணெய் வைப்பது கண்களுக்கு குளிர்ச்சியை அளிக்கும்.

பொதுவாக கண்களுக்கு ஓய்வு என்றால், எதையும் உற்று அல்லது கூர்ந்து பார்க்காமல் இருந்தாலேப் போதும். அதாவது சாதாரணமாக கண்களால் எந்தப் பொருளையும் பார்ப்பதால் கண்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. ஆனால் எதையாவது உற்றுப் பார்க்கும் போதுதான் அதற்கு பாதிப்பு ஏற்படுகிறது. சிறிது நேரம் எந்தப் பொருளையும் உற்றுப் பார்காகமல், எதைப் பற்றியும் சிந்திக்காமல் இருப்பதும் நல்ல பயிற்சிதான்.

அதேப்போல மதியம் உணவு இடைவேளையின் போது சாப்பிட்டுவிட்டு உடனடியாக கணினி முன் அமர்வதைவிட, சாப்பிட்ட பின் ஒரு 15 நிமிடம் அமரும் நாற்காலியிலேயே தளர்வாக அமர்ந்தபடி கண் மூடி இருப்பது ஏன் 10 நிமிடம் தூங்குவது கூட மிகவும் நல்லது. ஒரு நாளைக்குத் தேவையான சக்தியை இந்த 15 நிமிட தூக்கத்தில் உடல் பெற்று விடும். அதற்காக படுக்கையில் படுத்து தூங்கக் கூடாது. அமர்ந்த படி தளர்வாக 15 நிமிடம் அமர்ந்திருந்தாலும் கூட நல்லது. இப்படி செய்வதால் மாலையிலும் நீங்கள் சுறுசுறுப்பாக இருக்க முடியும்.

தமிழன் என்ற திமிரு எனக்கும் உண்டு...!


கணினியை தட்டி நீ ஆயிரம் மென்பொருளை தயாரிக்கலாம். ஆனால், உன்னால் ஒரு நெல்மணியை கூட தயாரிக்க முடியாது.


ஒவ்வொரு நாளும் சராசரியாக 62 விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கிறார்கள் கணினியை தட்டி நீ ஆயிரம் மென்பொருளை தயாரிக்கலாம். ஆனால், உன்னால் ஒரு நெல்மணியை கூட தயாரிக்க முடியாது. ...!!

அனைத்து நாடுகளும் விவசாயத்தை வளர்த்துக் கொண்டிருக்கிறது...! ஆனால், நம் நாடோ விவசாய நிலங்களை அழித்து கொண்டிருக்கிறது...! உணவு வாங்க பணம் வேண்டும் அதற்காக விவசாய நிலத்தை விற்றாய், நாளை உன் கையில் பணம் இருக்கும்...

ஆனால், உண்ண உணவு இருக்காது..
பணத்தையும் உண்ண முடியாது...

இந்த நிஜத்தை நாம் என்றுதான் உணர்ப்போகிறோமோ தெரியவில்லை..?! விவசாயத்தின் அழிவு தேசத்தை உணவுப் பொருள் உற்பத்தியில் பற்றாக்குறையையும் அதைத் தொடர்ந்த பஞ்சத்தையும் நோக்கி மெல்ல மெல்ல இழுத்துச் செல்கிறது. விவசாயத்திற்கும் உள்நாட்டுத் தொழில்துறைக்கும் துரோகமிழைத்து நாட்டை மீண்டும் அடிமையாக்கத் துடிக்கும் ஆளும் கும்பலான எட்டப்பர்களை உடனடியாக வீழ்த்தாவிட்டால் ஒட்டுமொத்தமாக ஒரு பெரும் அழிவை இந்நாடு சந்திக்க வேண்டியிருக்கும்.

-அன்புடன் கனகராஜ்


நேரம் இருந்தால் முழவதையும் படிக்கலாம்


இவரது பெயர் ராமசாமியோ- குப்பு சாமியோ- கோவிந்த சாமியோ இருக்க கூடும்.. பெயரில் என்ன இருக்கிறது..?? விஷயத்திற்கு வருவோம்... 

இவருக்கு வயது சுமார் எழுபத்தைந்து.. படிக்க வசதி இல்லாத காரணத்தால் தன்னுடைய தந்தை செய்த அந்த மானங்கெட்ட விவசாய பொழப்பை தேர்ந்தெடுத்தார் தன்னுடைய பதினான்கு வயதில்... இதோ உருண்டு ஓடி விட்டது அறுபதாண்டுகள்... இந்த அறுபதாண்டுகளில் இவர் இந்த நாட்டுக்கு என்ன கிழித்திருக்கிறார் தெரியுமா..???? 

தன்னுடைய ஒரு ஏக்கர் விவசாய நிலத்தின் மூலம் ஒரு போக விவசாயத்தின் மூலம் சுமார் 350 டன் நெல் உற்பத்தி செய்திருக்கிறார்... ( ஒரு போகத்திற்கு தண்ணீர் கிடைத்ததும், உரம் வாங்க கடன் வாங்குவதுமே பெரும் பாடாகி விட்டதால் இவரால் ஒரு போகத்திற்கு மேல் விளைவிக்க முடியவில்லை..) மேலும் அவ்வப்போது உளுந்து, எள் போன்ற தானியங்களை ஒரு குத்து மதிப்பாக சொன்னால் கூட 100 டன்கள் விளைவித்திருப்பார்..

சுமார் 400 தங்கள் தாவர, மிருக கழிவுகளை ரீசைக்கிள் செய்து உபயோகித்திருக்கிறார்... வீட்டு வரி, தண்ணி வரி, வாய்தாவரி என்ற வகையில் இந்த நாட்டுக்கு இவர் கட்டிய வரிகளில் இவர் ஒரு மாடி வீட்டை கட்டி இருக்க முடியும்.. ஆனாலும் அவைகளை இவர் ஒழுங்காக கட்டிய பாவத்தால் ஒவ்வொரு மழை காலத்திலும் ஒழுகும் கூரையை கூட நேரத்திற்கு மாற்ற முடிந்ததில்லை... 

இவரது தலையில் கட்டி இருக்கும் உருமா முழுதாய் இருக்கும் வரை இடுப்பில் வேட்டி என்ற பெயரில் இருக்கும்... அதுவே கந்தலாகி போனால் நீள நீளமாய் கிழிக்கப்பட்டு கோவணமாய் அவதாரமெடுக்கும்... ஆனால் நிச்சயம் அந்த கோவணத்தில் "இந்தியா" என்றோ.."சஹாரா.." :கிங் பிஷர்" என்றோ எழுதி இருக்காது...திருமணத்தின் போது கடனை வாங்கி தன்னுடைய மனைவி கழுத்தில் கட்டிய கால்பவுன் தங்கமும் அடகுக்கு போய் மூழ்கிவிட்டதால் மஞ்சள் கூட இழந்த கயிறு வெள்ளையாய் இளிக்கிறது... இவரது பாதுகாப்புக்கு ஒரு ரப்பர் செருப்பு கூட கிடைத்ததில்லை... இந்த பாவியை பற்றி பேசி நம் நேரத்தை ஏன் வீணடிக்க வேண்டும்..??
நமக்கு வேறு வேலை இருக்கிறது.. டெண்டுல்கருக்கு பாரத ரத்னா வாங்கி கொடுத்து அவரை மந்திரியாக்கி அழகு பார்க்க வேண்டும்.. அவரல்லவா இந்த நாட்டிற்காக உழைத்து உழைத்து ஓடாய் தேய்ந்திருக்கிறார்..???

Source:kblotry.


மரியாதை என்பது, பெற்றோர் மனதில் இருந்து தான் பிள்ளைகளுக்கு வரும்


இன்று முகநூலில் பலர் மரியாதையின்றி சர்வ சாதாரணமாய் அடுத்தவர் மனம் புண் பட பேசும் பொழுது இந்தப் பழமொழியில் ஐயம் தோன்றுகின்றது. மரியாதை மனதில் இருந்து தான் வரவேண்டும் !
யார் மனதில் இருந்து ?? 

சரி சில உதாரணங்கள் / உண்மைகள் : 
என் அப்பா அம்மா அமெரிக்கா வந்திருந்த பொழுது மெழுகு (WAX) Mesuem அழைத்துச் சென்றோம் அங்கே அமெரிக்க அதிபர் ஒபாமா கை கட்டி குனிந்து நிற்பது போன்ற ஒரு மெழுகு சிலை உண்டு . அருகினில் ஒரு மேஜை நாற்காலி இருக்கும் . மக்கள் அந்த நாற்காலியில் உட்கார்ந்து ஒபாமா தனக்கு சேவகம் செய்வது போன்று புகைப்படம் எடுத்துக்கொள்ளலாம் . கேளிக்கைக்காக எதுத்துக்கொள்ளும் விளையாட்டான ஒரு புகைப்படம் தான். நாங்கள் எவ்வளவோ சொல்லியும் என் அப்பா அந்த புகைப்படம் எடுக்க அனுமதிக்கவில்லை . "அவர் இந்த நாட்டோட அதிபர் . நான் ஒரு சாதாரண மனுஷன். அவர் எனக்கு கை கட்டி சேவகம் . பண்றதா . விளையாட்டானாலும் ஒரு தகுதி தராதரம் எல்லாம் வேண்டாமா ... அதெல்லாம் தப்புமா .." என்று சொல்லிவிட்டார் சில நாட்களுக்கு பின் என் மாமனார் மாமியார் அமெரிக்கா வந்தனர் ... அப்படியொரு ஒற்றுமை என் மாமனாரும் அதே பதிலைக் கூறி அந்த புகைப்ப் படத்தை தவிர்த்து விட்டார். 

மற்றுமொரு சம்பவம் : 
என் உடன் பணிபுரியும் நண்பர் ஒருவர் விடுமுறைக்கு இந்தியா செல்ல விருந்தார் அவரிடம் எனக்கு தேவையான ஒரு பொருளை கொடுத்து அனுப்பும் படி என் அப்பாவிடம் சொன்னேன். "அப்பா, இதான் பா அவனோட போன் நம்பர் இத்தன மணிக்கு flight லேன்ட் ஆகும் ... இந்த டைம் க்கு போன் பண்ணினா அவன் கிட்ட பேசலாம் " "சரி மா அவர் கிட்ட என் போன் நம்பர் குடுத்து இருக்கியாமா ?" "அவர் சென்னையில எங்க இருக்காரு. அவருக்கு ஏர்போர்ட் ல சிரமமா இருக்கும்னா நான் மறுநாள் அவர் வீட்டுக்கு வேணும்னாலும் போறேன் மா.

" நான் இடைமறித்து.. " 

அப்பா அப்பா அவன் என் டீம் ல தான் வேல பாக்கறான் . என்ன விடவும் 4-5 வயசு சின்ன பய்யன் பா. அவன் இவன்னே சொல்லலாம் " "அதெப்படிமா நான் அவர இது வரைக்கும் பார்த்ததே இல்ல , எனக்கு அவர் யாருன்னே தெரியாது . உன் கூட வேல பார்க்கறதால நட்பு ரீதியா நீ வேணும்னா நீ வா போ அப்டின்னு..பேசலாம் . அதுக்காக நானும் அப்டி பேசறது தப்பு இல்லையா ? . அதுவும் இல்லாம உன் கூட வேல பார்க்கராருன்னு சொல்ற அப்போ நல்லா படிச்ச்சவராதான் இருக்கணும் , பெரிய கம்பெனில நல்ல வேலைல இருக்காரு . அவர் படிப்பு வேலைக்கெல்லாம் நான் மரியாதை குடுக்கணும் இல்லையா. வயசுல பெரியவன்னு நான்பாட்டுக்கு மரியாதை இல்லாம பேசறது எல்லாம் தப்புமா " என்றார். 

இப்பொழுது சொல்லுங்கள் என் புது மொழி சரி தானே மரியாதை என்பது, பெற்றோர் மனதில் இருந்து தான் பிள்ளைகளுக்கு வரும் ??!!

நன்றி - ஸ்ரீ

Related Posts Plugin for WordPress, Blogger...

வந்து சென்றவர்கள்