சரி சில உதாரணங்கள் / உண்மைகள் :
என் அப்பா அம்மா அமெரிக்கா வந்திருந்த பொழுது மெழுகு (WAX) Mesuem அழைத்துச் சென்றோம் அங்கே அமெரிக்க அதிபர் ஒபாமா கை கட்டி குனிந்து நிற்பது போன்ற ஒரு மெழுகு சிலை உண்டு . அருகினில் ஒரு மேஜை நாற்காலி இருக்கும் . மக்கள் அந்த நாற்காலியில் உட்கார்ந்து ஒபாமா தனக்கு சேவகம் செய்வது போன்று புகைப்படம் எடுத்துக்கொள்ளலாம் . கேளிக்கைக்காக எதுத்துக்கொள்ளும் விளையாட்டான ஒரு புகைப்படம் தான். நாங்கள் எவ்வளவோ சொல்லியும் என் அப்பா அந்த புகைப்படம் எடுக்க அனுமதிக்கவில்லை . "அவர் இந்த நாட்டோட அதிபர் . நான் ஒரு சாதாரண மனுஷன். அவர் எனக்கு கை கட்டி சேவகம் . பண்றதா . விளையாட்டானாலும் ஒரு தகுதி தராதரம் எல்லாம் வேண்டாமா ... அதெல்லாம் தப்புமா .." என்று சொல்லிவிட்டார் சில நாட்களுக்கு பின் என் மாமனார் மாமியார் அமெரிக்கா வந்தனர் ... அப்படியொரு ஒற்றுமை என் மாமனாரும் அதே பதிலைக் கூறி அந்த புகைப்ப் படத்தை தவிர்த்து விட்டார்.
மற்றுமொரு சம்பவம் :
என் உடன் பணிபுரியும் நண்பர் ஒருவர் விடுமுறைக்கு இந்தியா செல்ல விருந்தார் அவரிடம் எனக்கு தேவையான ஒரு பொருளை கொடுத்து அனுப்பும் படி என் அப்பாவிடம் சொன்னேன். "அப்பா, இதான் பா அவனோட போன் நம்பர் இத்தன மணிக்கு flight லேன்ட் ஆகும் ... இந்த டைம் க்கு போன் பண்ணினா அவன் கிட்ட பேசலாம் " "சரி மா அவர் கிட்ட என் போன் நம்பர் குடுத்து இருக்கியாமா ?" "அவர் சென்னையில எங்க இருக்காரு. அவருக்கு ஏர்போர்ட் ல சிரமமா இருக்கும்னா நான் மறுநாள் அவர் வீட்டுக்கு வேணும்னாலும் போறேன் மா.
" நான் இடைமறித்து.. "
அப்பா அப்பா அவன் என் டீம் ல தான் வேல பாக்கறான் . என்ன விடவும் 4-5 வயசு சின்ன பய்யன் பா. அவன் இவன்னே சொல்லலாம் " "அதெப்படிமா நான் அவர இது வரைக்கும் பார்த்ததே இல்ல , எனக்கு அவர் யாருன்னே தெரியாது . உன் கூட வேல பார்க்கறதால நட்பு ரீதியா நீ வேணும்னா நீ வா போ அப்டின்னு..பேசலாம் . அதுக்காக நானும் அப்டி பேசறது தப்பு இல்லையா ? . அதுவும் இல்லாம உன் கூட வேல பார்க்கராருன்னு சொல்ற அப்போ நல்லா படிச்ச்சவராதான் இருக்கணும் , பெரிய கம்பெனில நல்ல வேலைல இருக்காரு . அவர் படிப்பு வேலைக்கெல்லாம் நான் மரியாதை குடுக்கணும் இல்லையா. வயசுல பெரியவன்னு நான்பாட்டுக்கு மரியாதை இல்லாம பேசறது எல்லாம் தப்புமா " என்றார்.
இப்பொழுது சொல்லுங்கள் என் புது மொழி சரி தானே மரியாதை என்பது, பெற்றோர் மனதில் இருந்து தான் பிள்ளைகளுக்கு வரும் ??!!
நன்றி - ஸ்ரீ
No comments:
Post a Comment